பிழைப்பவரின் பேருழைப்பை முடிந்த மட்டும்
பிழிகின்ற கொடுமைக்குப் பெயர்சு ரண்டல்
உழைப்பவரின் குருதியினை உறிஞ்சு கின்றோர்
உலகினிலே கொழுக்கின்ற சுரண்டல் காரர்
தழைக்கின்ற வளமனைத்தும் உழைக்கா தார்க்கா?
தாழ்வுறுத்தும் வளமையெல்லாம் உழைப்போ ருக்கா?
உழைக்கின்ற மக்களெல்லாம் சிந்திக் கின்ற
உழைப்பேறகாக்காரணத்தால் தொடரும் துன்பம்.
விளம்பரத்தின் பகட்டாலே கண்ணா டிக்கல்
வைரமெனல் வணிகத்தில் சுரண்டல்! சற்றும்
நலப்பணியில் நோக்கமிலார் தொடங்கும் தொண்டு
நனிமிக்க ஏமாற்றுச் சுரண்டல் இன்றும்
துலக்கமிலாப் பழங்கதையும் தொன்மக் கூற்றும்
சொல்லுகின்ற அருள்வாக்கும் பலியும் நாளும்
விளங்காத மனுதரும வெட்கக் கேடும்
உண்மையில்நம் "அறிவேய்க்கும் பெருஞ்சு ரண்டல்"
அன்புணர்வு மாந்தநேயம் என்னும் சொற்கள்
அவற்றின்நற் பொருளிழந்த அலங்கோ லத்தால்
முன்பிருந்த நல்லிணக்கம் அமைதி வாழ்க்கை
முற்றிலுமாய் இன்றைக்கு எங்கும் இல்லை!
நின்றெண்ணிப் பார்த்திடவே ஒருவ ருக்கும்
நேரமில்லை, காலமில்லை! விரைவு, ஓட்டம்!
வென்றுயர வேண்டுமெனும் வேகப் போக்கில்
வீழ்த்துவதோ நல்லுணர்வைச் சிந்திப் பீரே!
Thursday, May 1, 2008
Wednesday, April 2, 2008
பூக்களே முட்களானால்...!
போலிகள் பெருக்கத் தாலே
பொறுப்புகள் தாழ்ந்து போச்சு!
காலிகள் பெருக்கத் தாலே
காவலர் பெருமை போச்சு!
தாலிகள் இல்லாத் தாய்மை
தமிழ்ப்புல மாண்பு போச்சு!
வேலிகள் பயிரை மேயும்
வேதனை தேசம் எங்கும்!
சேலைகள் நகைகள் என்ற
சிங்காரக் கனவில் பெண்கள்!
மாலைகள் மரியா தைகள்
மாளிகைக் கனவில் ஆண்கள்!
பாலைப்பா சத்தி னோடு
புகட்டவும் பொழுது மின்றி
ஆளையே வளர்த்தோம் வீட்டில்
அன்புதான் வளர வில்லை!
Thursday, March 20, 2008
யார் வலியவர்?
இறைவா!
உன்னைப் பஞ்சபூதம்
என்று எண்ணியவன்
கைகூப்புகிறான்.
பஞ்சலோகம் என்று உணர்ந்தவன்
கடத்துகிறான்.
வலியவன் நீயா? அவனா?!...
உன்னைப் பஞ்சபூதம்
என்று எண்ணியவன்
கைகூப்புகிறான்.
பஞ்சலோகம் என்று உணர்ந்தவன்
கடத்துகிறான்.
வலியவன் நீயா? அவனா?!...
Subscribe to:
Posts (Atom)
